ஞாயிறு, 27 நவம்பர், 2016

காதல் ஊர்வலம்

"மகேஷ் இப்போ எங்க இருக்க நீ"
படபடப்பாய் போனில் கேட்டாள் மகா!



"என்ன விசயம் மகா???

ஒரு வாரமா ஒரு போன் பண்ணல... ஒரு மெசேஜ் பண்ணல... உன் நம்பருக்கு ட்ரை பண்ணாலும் சுவிட்ச் ஆஃப்னு வருது...
என்னாச்சு? ! "




" உடனே பார்க்கணும் நேரு பார்க் வர முடியுமா??? "




" எதாச்சும் பிரச்சனையா மகா "



" நீ வா நேர்ல பேசிக்கலாம்... "


பதிலுக்கு காத்திருக்காமல் போனை கட் செய்தால் மகா!




***********************************************,, **************************

நேரு பார்க் அந்த சாயங்கால நேரத்தில் விளையாடும் சிறுவர்களாலும், மாலை நேரத்தில் மங்கையின் முந்தானைக்குள் கண்ணாமூச்சியாடும் சில மன்மதன்களாலும் நிரம்பி இருந்தது!



"என்ன மகா ஏதோ பேசணும்னு சொன்னியே என்ன விசயம்... "




" யாரு அவ??? "


" எவ மகா... "



" தெரியாத போல கேட்காதே சரியா... "



" சத்தியமா நீ யாரை கேக்கறனு எனக்கு தெரியலடி... "




" சரி நான் நேரடியா விசயத்துக்கு வர்றேன்... போன வாரம் மூன்லைட் லாட்ஜ்ல ஒருத்திக்கூட போனியே அவள்தான்... "




" ஹே என்ன சொல்ற நீ... மூன் லைட் லாட்ஜ் எங்க இருக்குனு கூட எனக்கு தெரியாது! "




" இனிமேலும் வீணா நடிக்காதே மகேஷ்...


உனக்கு உடம்பு சுகம்தான் முக்கியம்னா என்னை ஏன்டா லவ் பண்ணி என் வாழ்க்கைய கெடுத்த... "





" மகா போதும் நிறுத்து இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசாதே... "



" உனக்கே இவ்வளவு கோவம் வருதே... உன்ன ஒரு பொண்ணுக்கூட பார்த்துட்டு என் ப்ரெண்ட் எனக்கு போன் பண்ணி சொன்னப்போ எனக்கு எப்படி இருந்திருக்கும்னு பார்த்துக்கோ... ச்சீ... நீ இப்படிப்பட்ட ஆளா??? "




" மகா.... "மகேசின் குரல் சற்றே ஓங்கியே வெளிப்பட்டது!


" குரலை உயர்த்தினா நீ நல்லவனாகிடுவியா... இனி என் முகத்துல நீ முழிக்க கூடாது... "



" நீ என்னடி சொல்றது... நான் சொல்றேன் கேட்டுக்கோ... எப்போ யாரோ சொன்னத வச்சி என்ன சந்தேகப்பட்டியோ அப்பவே நான் செத்துட்டேன்... "


சுற்றி நின்றவர்களின் பார்வை இவர்கள் பக்கம் திரும்பவே அங்கு நிற்க பிடிக்காமல் வெளியேறினான் மகேஷ்!



************************************************************************************


'மகேஷ் என்னை மன்னிசிடு மகேஷ்... எனக்கு வேற வழி தெரியல... நீ என்னை வெறுக்கணும்னுதான் என் மேல உன் விரல்கள் படாத உனக்கு அந்த பட்டம் கட்டினேன்...

தப்புதான் எனக்கு வேற வழி தெரியலடா...

எனக்கு மார்பகப் புற்றுநோய்னு போன வாரம்தான் தெரிஞ்சது...

நாளைக்கு எனக்கு ஆபரேசன் நான் பிழைப்பனானு சந்தேகம்தான்...


என்ன லவ் பண்ண பாவத்துக்கு உன் வாழ்க்கை பாழா போறத என்னால ஏத்துக்க முடியலடா...

சாரிடா செல்லம் அடுத்த ஜென்மம்னு ஒண்ணு இருந்தா நானே உனக்கு மனைவியா வரணும்... அப்போவாச்சும் இந்த நோயில்லாத வர வரம் வேணும்டா...

I love u mama...

"

ஓவென்று கதறி அழுதாள் மகா!




*****************,, ***, ***************************


மறுநாள் மாலை...


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பரபரப்பாய் இருந்தது!


பஸ் பிடிக்கும் அவசரத்தில் யாரும் தனக்கு நடக்க தெரியும் என்பதை மறந்து ஓடிக் கொண்டிருந்தனர்!




"ஏம்பா பஸ்ல போஸ்டரெல்லாம் ஒட்டக்கூடாது "
டிரைவரின் குரல் எச்சரித்தது!



" சார் இந்த பஸ்ல காலேஜுக்கு போற பொண்ணு தான் சார் இவ... காலையில இறந்து போயிட்டா... அவளோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர் சார் இது... ப்ளீஸ் சார் கிழிச்சிடாதிங்க! "



" என்ன சார் இப்போதான் ஒரு க்ரூப் வந்து இதே போல சொல்லி ஒரு போஸ்டர் ஒட்டித்து போனாங்க...

இப்போ நீங்க வந்து இதே சொல்றீங்க...


ரெண்டு பேரும் ஒரு வேள லவ் கிங்னு... "




" ஐய்யோ அப்படியெல்லாம் இல்லீங்க இந்த பொண்ணு ஆபரேசன் பண்ணும்போது இறந்துட்டா... "



முதலில் ஒட்ட பட்டிருந்த போஸ்டர் பக்கத்தில் மகாவின் போஸ்டரை ஒட்டிவிட்டு போஸ்டர் ஒட்டுபவர் நிமிர்ந்து பார்த்தார்...


மகா வும், மகேசும் அவர்கள் கல்லூரிக்கு செல்லும் பேருந்தில் பயணமாக காத்திருந்தனர்... கண்ணீர் அஞ்சலி பதாகையாக!


மகேஷ் விபத்தில் இறந்துபோனதாய் அதில் இருந்தது...

அவன் தானாய் லாரியில் தலை வைத்ததை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை!


**********************************************************************************

காதல் விட்டுக்கொடுக்கும்...


உயிரை விட்டும் அன்பை கொடுக்கும்!


_sathya sriram